ஐக்கிய அமெரிக்கா குடியரசில் வரும் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். இந்தா முடக்கம் சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக இருந்தது. அந்த இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹேக்கர்கள் அதில் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிரம்பின் பிரசார இணையதளம் முடக்கப்பட்டது தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…