அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிரான தீர்மானம்! எதிர்ப்பு 229! ஆதரவு 198! பரபரக்கும் அரசியல் களம்!

Default Image
  • அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  • அதில் ட்ரம்ப்பிற்க்கு ஆதரவாக 198 பேரும், 229 பேர் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தனது பதவியை தவறாக பயன்படுத்தி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது குற்றசாட்டு விசாரணையில் தலையிட்டதாக கூறி அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அமெரிக்க பிரதிநி சபையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஜோ பிடென் தான் அடுத்த வருடம் அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ட்ரம்பிற்கு எதிராக 229 வாக்குகள் பதிவாகியுள்ளன.  ஆதரவாக 198 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

இதற்கடுத்து செனட் சபைக்கு இந்த தீர்மானம் கொண்டுசெல்லப்படுமாம். அங்கு 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் ட்ரம்பிற்கு ஆதரவாக 53 பேர் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக 47 பேர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்