சிக்கலில் ட்ரம்ப் நிர்வாகம்!ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற மறுக்கும் அதிகாரிகள் ….

Default Image
பனாமா நாட்டிற்கான அமெரிக்க தூதர் ராஜினாமா செய்தார்.அதற்குகாரணம்  டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற முடியாது என அதிரடியாக கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரான ஜான் ஃபீலே-வின் ராஜினாமாவை வெள்ளை மாளிகையும் உறுதி செய்துள்ளது. தூதராக பதவியேற்கும் போது, அமெரிக்க அதிபருக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்ததாகவும், டிரம்பின் நிர்வாகத்திற்கு கீழ் பணியாற்று தமக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் ராஜினாமா முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்னர், அவரது நிர்வாகத்தில் பணியாற்றும் பலர் பதவி விலகுவதும், நீக்கப்படுவதும் நீடித்து வருகிறது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்