Trump Vs Biden: தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்.!
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 238 சபை வாக்குகளில் பைடன் முன்னிலையில் உள்ளார். அதேபோல் 213 சபை வாக்குகளில் டிரம்ப் பின்னடைவில் இருக்கிறார். இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது.
அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இதனால் மொத்தம் 7 மாகாணங்களில் முடிவுகள் வெளிவரவில்லை.
இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.