திருக்குறளோடு…ட்ரம்பை வரவேற்று…நச்சுனு பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!வரவேற்பு பாடலா..!இல்ல??
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக திருக்குறளோடு..காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இது தற்போது வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று முற்பகல் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார் உடன் மனைவி மற்றும் மகளும் வருகை தந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பின் ஆக்ராவிலுள்ள உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மகாலை தனது குடும்பத்தினருடன் ட்ரம்ப் பார்வையிட்டார்.மேலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.மேலும் ட்ரம் வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் டிரம்ப் வருகையையொட்டி, காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளை திருக்குறள் மூலம் உலகிற்கு பரப்பும் விதமாகஏ.ஆர். ரஹ்மானும், யு2 நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘அஹிம்சா’ என்கிற பாடலை அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அர்ப்பணித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டு உள்ளார். ஏ.ஆர் ரஹ்மானின் மகள்களான காதிஜா மற்றும் ரஹிமா ஆகியோர் இந்தப் பாடலை பாடி உள்ளனர்.
Here's a track from us to welcome @POTUS to India ????????, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
உலக பொதுமறையான திருக்குறளில் இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தில் இருந்து,
‘செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.’‘என்கிற திருக்குறளுடன் தொடங்குகின்றது.தமிழைப் போற்றும் விதமாக முதலில் குறள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள அத்தனை வரிகளும் ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது.இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் அதிபர் ட்ரம்புக்கு டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.