அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆஃப்கானிஸ்தான் மக்கள் கௌரவம் !
பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சைக்கு பெயர் போன அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளனர் .
பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறி வழங்கப்பட்ட இந்தப் பதக்கம் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நிதியுதவி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துவருகிறார்.
தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை அந்த நாட்டுக்கு உதவ முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டு டிரம்புக்கு வீரத்துக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.