ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் நேற்று அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றபோது திடீரென கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்பின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர்.
மறுபக்கம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். இவர்களை தடுக்க பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
வன்முறை தூண்டும் வகையில் தான் பேசிய வீடியோவை ட்ரம்ப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், ட்ரம்பின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் 24 மணி நேரத்துக்கு முடக்கம் என்றும் ட்விட்டர் 12 மணி நேரம் முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…