அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானின் இறுதிச் சடங்கானது டெஹ்ரான் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் நடந்தது இதில் அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் திரண்டனர்.கொல்லப்பட்ட காசிம் சுலைமானின் மகள் ஜீனப் தேசிய தொலைக்காட் ஒன்றில் பேசுகையில் என் தந்தையின் கொலை அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தினத்தைக் கொண்டு வரும் என்றும் ட்ரம்ப் ஒரு பைத்தியகாரர் என்று சாடி உள்ளார்.
பைத்தியக்கார ட்ரம்ப் என் தந்தையினுடைய இந்த தியாகத்துடன் அனைத்தும் முடிந்து விட்டது என்று கனவு காணாதீர்கள் என்று ஜீனப் ஆவேசமாகப் பொங்க பேசினார்.
இந்நிலையில் தான் சுலைமானின் மரணம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துள்ளது.மேலும் அயதுல்லா கோமேனி மறைவின் போது திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் போலவே இந்த இறுதிச் சடங்கின் கூட்டம் நினைவுபடுத்துகிறது என்று உலக ஊடகங்கள் எல்லாம் வர்ணிக்கும் வேளையில் ஈரானின் மதக்குருமாரின் ஆட்சியை பிடிக்காத பொதுமக்களுக்கும் கூட காசிம் சுலைமானை தங்களுடைய தேசிய ஹீரோவாகப் பார்க்கின்றனர் என்று உலக ஊடகங்களின் செய்தி வெளியாகி வருகின்றது.
அசைத்து பார்க்கமுடியாத பலத்துடன் அமெரிக்காவிடம் முறுக்கி வந்த காசிம் சுலைமான் கொல்லப்பட்ட நிலையில் அந்த இடத்தில் தற்போது புதிய கமாண்டர் இஸ்மாயில் குவானி நியமிக்கப்பட்டுள்ளார்.சுலைமானின் மரணம் குறித்து கூறுகையில் நாங்கள் தொடர்ந்து எங்கள் ராணுவ தளபதி சுலைமான் பாதையிலேயே பயணிப்போம்,சுலைமானின் இழப்பை சரிசெய்ய நாட்டாமைக்காரன் அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்திலிருந்தே விரட்டி அடிப்பது தான் ஒரே லட்சியம் என்று நரம்புகள் புடைக்க ஆவேச குரலில் தெரிவித்தார்.
இவ்வாறு இரு நாடுகளுக்கிடையே நாளுக்கு நாள் உறவு மோதமாகி வரும் நிலையில் மூன்றார் போர் ஏற்படுவதற்கான அனைத்து சூழலும் நிலவி வருவதை உலக நாடுகள் அச்சத்துடன் உற்றுநோக்கி வருகின்றனர்.இதற்கிடையில் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை எல்லாம் வெளியே அனுப்ப நினைத்தால் மிகப்பெரிய தொகையை ஈராக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும் இது குறித்து ட்ரம்ப் அமெரிக்கப் படைகளை நட்பு ரீதியாக அல்லாமல் வேறு வகையில் ஈராக்கிலிருந்து வெளியேற்ற நினைத்தால் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாதத் தடைகளை விதிப்போம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் இதற்கு ஈராக்கும் தயார் என்று முறுக்கி கொண்டு இருப்பது உலக நாடுகளை இரு நாடுகளின் மீது உற்றுநோக்க வைத்துள்ளது மேலும் ஒருவிதமான போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…