தேர்தல் பிரச்சாரத்தின் போது இடையூறு ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.
அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருதரப்பு தேர்தல் பிரச்சாரங்களும் தற்பொழுது சூடுபிடித்து வருகிறது.
அந்தவகையில் நியூ ஹேம்ப்சயர் மாகாணத்தில் அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஜார்ஜ் பிளாய்டு யார் என தெரியாது எனவும், வேலை இல்லாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது இடையூறு ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை திருடர்கள் என விமர்சித்தார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…