சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் அதிபர் ஆசாத்- ஐ.எஸ் பயங்கரவாதிகள் – கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் நடந்துவருகிறது.தற்போது இந்த மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.அதேபோல் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் பல்வேறு பகுதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பகுதிகள் அரசுப் படைகளால் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் மட்டும் மோதல் நடைபெற்று வருகிறது.அங்கு நடைபெறும் மோதலால் உள்நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே தான் இந்த உள்நாட்டு போரில் தான் ரஷ்யா மற்றும் அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகள் அங்குள்ள மக்களை கொன்று குவித்தாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன்.ஆனால் அப்போது பாதுகாப்பு துறை அமைச்சக செயலராக இருந்த ஜேம்ஸ் மேட்டிஸ் அந்த முடிவை மறுத்துவிட்டார். அதனால் அவர் முடிவுக்கே விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025