சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் ஆய்வு கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதனை வெளியிடுவேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் சந்தையில் தான் கொரோனா கண்டறியப்பட்டது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனாதான் திட்டமிட்டு கொரோனவை உருவாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார்.
இது தொடர்பாக நேற்று அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர், கொரோனா வைரஸ் சீனாவால் தான் உருவாக்கப்பட்டது என கூறுவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், ‘ சீனாவில் உள்ள வுகாண் நகரில் இருக்கும் ஆய்வு கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதனை வெளியிடுவேன்.’ என தெரிவித்தார்.
மேலும், சீனாவின் மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…