கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கிய நாடாக ஈரான் வலம் வருகிறது. உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்த போதிலும் சர்வதேசத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமாக அதிக லாபம் ஈட்டுகின்ற வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்ந்து வருகிறது .
ஈரானில் முன்னாள் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மூலமாக கொல்லப்பட்டார். இது அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்கா- ஈரான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஈரான் தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று ஈரான் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த பராக் ஒபாமா ஆட்சிகாலகட்டத்தில் ஈரானுடன் சிறந்த கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இதன் மூலமாக அமெரிக்காவுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற காலம் தொடங்கியே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் மோதல்போக்கு நீடித்து வந்ததை உலகமே பார்த்தது.
இவ்வாறு இருந்த சமயத்தில் தான் ஈரான் அரசுக்கு மிகவும் நெருக்கமான புரட்சிகர ராணுவப் படைத் தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ராணுவ வான் ஏவுகணைத் தாக்குதலில் காரிலில் செல்லும் போது கொல்லப்பட்டார். அவரை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
ஆனால் அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு ஈரானில் கடும் எதிர்ப்பு எழுந்தது.காரணம் ஈரான் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுலைமானி அந்நாட்டில் மிகவும் பிரபலமான ராணுவ வீரராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் அதிபர் காமேனிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் அடிக்கடி வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. குர்த் படைத் தளபதியாக இருந்த சுலைமானி பாக்தாத் அருகே கொல்லப்பட்டார்.
அமெரிக்கா தனது தேவை முடிந்தவுடன் தங்கள் சுயலாபத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்து பின் அவரை பயங்கரவாதி என்று அறிவிக்கும் என்று கொலை செய்யப்பட்ட சுலைமானின் மகள் ஆவேசம் வெளிபட தெரிவித்தார். வான் தாக்குதல் நடத்திய அமெரிக்கா விரைவில் கடும் விளைவுகளைச் சந்திக்கும் என்று சுலைமானியின் இரங்கல் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இவ்வாறு ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் விரிசல் விசாலமாகி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் அமெரிக்க பெண் தூதர் லானா மார்க்ஸை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா ஈரான் மீது குற்றஞ்சாட்டயது.
ஆனால் இதற்கு ஈரான் தெரிவித்தது.மேலும் இதுகுறித்து ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி ஒரு பேட்டி அளித்தார் அதில் தாங்கள் அமெரிக்க தூதரை கொன்று பழி தீர்க்க விரும்பவில்லை எனவும் அதற்கு மாறாக எங்கள் தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ராணுவத்தை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும் இது அதிபருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…