கொரோனாவில் இருந்து மீண்ட அதிபர் டிரம்ப்.. முகக்கவசத்தை கழற்றி ஆதரவாளர்களுக்கு கையசைத்ததால் சர்ச்சை!
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அதிபர் டிரம்ப், தற்பொழுது புதிய சர்ச்சைக்குள்ளாகினார்.
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர். 4 நாட்களுக்கு பின் அவர் குணமடைந்த நிலையில், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்பொழுது புகைப்படத்திற்கு போஸ் குடுத்த அவர், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, தனது ஆதவர்களிடையே கையசைத்தார்.
மேலும், மக்கள் கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என கூறினார். முகக்கவசத்தை கழற்றிய அதிபர் டிரம்பின் செயல், தற்பொழுது சர்ச்சைக்குள்ளானது.