ஜோ பிடனின் உடல் வலிமை ஆரோக்கியம் குறித்து டிரம்ப் கேள்வி!

ஜோ பிடனின் உடல் வலிமை ஆரோக்கியம் குறித்து டிரம்ப் கேள்வி.
அமெரிக்க அதிபரான ட்ரம்ப், 78 வயதான ஜோ பிடனின் உடல் வலிமை, ஆரோக்கியம் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஜோ பிடன், 70 வயதுக்கு மேலானவர்கள் பற்றி இப்படி கேள்வி எழுப்புவது நியாயம் தான். அதே நேரம் பொது மக்கள் தம்மை கூர்ந்து கவனித்தால் இதில் தெளிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் ஜோ பிடனிடம், அமெரிக்க அதிபரின் பதவி காலம் நான்கு ஆண்டுகள் என்பதால் ஒரு முறை மட்டுமே அதிபராக இருப்பீர்களா? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 8 ஆண்டுகள் அதிபராக பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அதிகம் சம்பாதிப்பவர்கள் நியாயமான பங்கு வகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.