தேர்தல் அறிவிப்பு போது கூலாக கோல்ப் விளையாடிய டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஏறக்குறைய நான்கு நாட்கள் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை போது யார் வெற்றி பெற்றார்..? என அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.
பல வதந்திகள் மற்றும் பரவலான செய்தி ஆகியவற்றிக்கு பின் கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் வரலாற்றில் முதல் முறையாகப் பெண் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போது, கோல்ப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.