கொரோனாவை கண்டு அதிபர் டிரம்ப் பீதியடைந்தார் – ஜோ பைடன்

Default Image

கொரோனாவை கண்டு அதிபர் டிரம்ப் பீதியடைந்ததாக  ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அமெரிக்கா தான் உலக அளவில் கொரோனா பதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.கொரோனா தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.அது பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.மேலும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் டிரம்ப் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

 அந்த வகையில் அதிபர் வேட்பளர் ஜோ பைடன் பென்சில்வேனியா உள்ள டவுன் ஹாலில் பேசினார் .அவர் கூறுகையில் ,அமெரிக்காவில் கொரோனா பரவியது குறித்து அதிபர் டிரம்ப் பீதியடைந்ததாகக் கூறியுள்ளார். “ கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ,டிரம்ப் துல்லியமற்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறார்” என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்