உலக சுகாதார அமைப்பிற்கு 30 நாட்கள் கெடு விதித்த ட்ரம்ப்.! பதிலடி கொடுத்த சீனா.!
சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என ட்ரம்ப் சுகாதார அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு (WHO -World Health Organisation) கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து செல்லும் நிதியை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், ட்ரம்ப் உலக சுகாதார நிறுவன தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
அதில், சீனா அரசிற்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதில்லை என 30 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உலக சுகாதார அமைப்பிற்கு தரப்படும் நிதியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதன் உறுப்பினர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா விலகிவிடும் என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில்,சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ட்ரம்பின் கடிதம் தெளிவற்ற நிலையில் இருக்கிறது. கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, சீனா மீது பழிபோட ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
கொரோனாவை எதிர்த்து உலக நாடுகளோடு இணைந்து அமெரிக்கா செயல்படவேண்டும். உலக சுகாதார அமைப்பிற்கு உறுப்பு நாடுகள் உரிய நேரத்தில் நிதி செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் இதனை வைத்து பேரம் பேச கூடாது. கொரோனா சமயத்தில் அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கு நிதியை நிறுத்துவது அமெரிக்கா அதன் கடமையை மீறும் செயலாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீனா உலக சுகாதார அமைப்பிற்க்கு 50 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது.