அமெரிக்க டொனால்ட் டிரம்ப்-வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
கிம் ஜாங் உன், டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகில் பெரும்பான்மையான நாடுகளில் வடகொரியாவுக்கு தூதரக உறவு என்பது கிடையாது. சிங்கப்பூரைப் பொறுத்தவரை வடகொரியாவுடன் நெருக்கமாகவும், வலுவான பொருளாதார பின்னணியும் இருந்து வருகிறது. வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளிடமும் அந்நாடு சுமூக உறவை வைத்துள்ளது.
அணு ஆயுதங்களை எதிர்க்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதன்மையானது என்பதும், உலக அமைதியை பெரிதும் விரும்பும் நாடு என்பதாலும் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் ஏனைய எந்த நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஏதேனும் ஒரு தலைவருக்கு பொதுமக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால் சிங்கப்பூரில் போராட்டங்கள் நடத்த தடை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.