மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது!
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு டிரம்புக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் உலக நாடுகளிலேயே அதிக அளவில் கொரானா வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக அமெரிக்கா தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை அமெரிக்காவில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் ஆலோசகர் ஹோம் ஹிக்சு அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு மட்டுமல்லாமல் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி, மார்க் மெடோஸ் ஃபாக்ஸ் அவர்கள் கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டதுமே அதிபரின் ஆக்சிஜன் அளவு வேகமாக வீழ்ச்சி அடைந்ததாகவும், மருத்துவமனை அழைத்து செல்வதற்கு முன்பாகவே அவருக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அவரது உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்து வருவதாக கடற்படை தளபதி அவர்களும் நேற்று தெரிவித்துள்ளார்.