அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா !
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றரை லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டிலான மிகப்பெரிய அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவிரிவான உள்கட்டமைப்பு மசோதா என அதை வர்ணித்துள்ள அதிபர் டிரம்ப், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் மட்டுமின்றி, குடிநீர், வடிகால் முறைகள், நீராதாரங்கள், நீர்வழிகள், எரிசக்தி, ஊரக உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றார்.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க, இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றம் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 1.5 லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.