வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என கூறிய அதிகாரியை நீக்கிய டிரம்ப்

Default Image

கடந்த வாரம் நவம்பர் 3 -ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று கூறிய உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

 கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.இதனிடையே டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார்.பல முக்கிய மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் அந்த மாகாணங்களில்  டிரம்ப் தரப்பின் வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.

கடந்த 7-ஆம் தேதி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார் .அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பைடனை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 217 சபை ஓட்டுக்களை  மட்டுமே பெற்றார்.ஆகவே ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார்.ஆனாலும் டிரம்ப் இதுவரை தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை, தான் வென்றேன் என்று உறுதியாகக் கூறி வருகிறார்.

இந்நிலையில் அதிபர் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று கூறிய உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் (சிஐஎஸ்ஏ) இயக்குனர் கிறிஸ்டோபர் கிரெப்ஸை நீக்கியதாக தனது ட்விட்டரில் டிரம்ப்  அறிவித்தார்.இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவரது பதிவில்,2020 தேர்தலின் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸின் சமீபத்திய அறிக்கை மிகவும் தவறானது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்