அதிபர் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு உதவுமாறு ஈரான் “இன்டர்போல்” எனப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால் சர்வதேச அரசியலில் கடும் பதற்றம் நிலவுகிறது.
ஈரான் ட்ரம்ப்பை கைது செய்ய காரணம் என்ன?:
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த 2018.,ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். இந்நிலையில் இவ்விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் உருவாகியது.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானமானது ஏவுகணை தாக்குதலை நடத்திற்யது.இதில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.இத்தாக்குதல் ஆனது அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தாக்குதலால் நிலவி வந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் அந்நாடு அரசு மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.மேலும் இவ்வழக்கில் டிரம்பை கைது செய்யவும் பிடிவாரண்டு பிறப்பித்து உள்ள ஈரான் அரசு அவரை கைது செய்ய உதவுமாறு இன்டர்போல் என்று அழைக்கப்படுகின்ற சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கையும் வைத்துள்ளது.இதுமட்டுமில்லாமல் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று இன்டர்போலிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக அதிபர் டிரம்ப்பை தவிர, வேறு யாருக்கெல்லாம் பிடிவாரண்டு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதேசமயத்தில் அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் அமெரிக்காவில் முடிந்த பிறகு இந்த வழக்கின் மீதான விசாரணை தொண்டும் என்பதை மட்டும் தற்போது ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.கோரிக்கை வைத்த ஈரானின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் டிரம்புக்கு எதிரான ஈரானின் பிடிவாரண்டு உத்தரவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…