அமெரிக்க படைகளை சவுதியில் குவிக்க ஒப்புதல் அளித்த டிரம்ப் !
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த எண்ணெய் ஆலையை கடந்த வாரம் ஆளில்லா விமானம் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால் தற்போது கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது நடத்த பட்ட மிக பெரிய தாக்குதலுக்கு சவூதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ராச்சியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்க படைகளை இல்லை நிறுத்துமாறு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.