அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் – ஜோ பைடன் இடையே நேருக்கு நேர் விவாதம், சூடுபிடித்து வருகிறது.
அமெரிக்க தேர்தல்:
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 45 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
நேருக்கு நேர் விவாதம்:
அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் விவாதம், ஓஹிகோ மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து அக்.15-ம் தேதி, ப்ளோரிடாவிலும், அக்.22-ம் தேதி டென்னிஸில் மாகாணத்திலும் நடைபெறவுள்ளது. முதல் விவாதம் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பம் முதலே அனல் பறக்கும் விமர்சனங்களை ஜோ பைடன் முன்னிறுத்தினார். இந்த விவாதத்தில் நடுவராக கிறிஸ் வாலஸ் பங்கேற்றார்.
இந்தியாவை விமர்சித்த டிரம்ப்:
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிகமாக இருப்பது கவலையளிப்பதாக பைடன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவில் கொரோனாவால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார் என்பது யாருக்கும் தெரியாது எனவும், கொரோனா இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளி விவர பட்டியலை இந்தியாவே பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
காலநிலை மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்திருப்பது குறித்து பேசிய பைடன், உலகில் புவி வெப்பமயமாதலில் 15 சதவீத பங்கை அமெரிக்கா வகிக்கிறதாக கூறினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என கூறினார்.
இதுகுறித்து தெரிவித்த டிரம்ப், மாசை காற்றுடன் சீனா கலப்பதாகவும், அதனை ரஷ்யா செய்கிறது. இந்தியாவும் செய்கிறது என கூறினார். டிரம்பின் இந்த கருத்தால், புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளார்.
பைடன் ஒரு கோமாளி:
மேலும் உரையாற்றிய பைடன், டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் கொரோனாவால் 2.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார் எனவும், இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ள முடியாமல் போராடுகிறார்கள் எனவும், கொரோனாவை கையாள டிரம்புக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என்றும், டிரம்ப் ஒரு பொய்யர் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப் கோபமடைந்து, ” பைடன் ஒரு கோமாளி எனவும், அவர் பேசுவது புரிகிறதா? என கேள்வியெழுப்பினார்.
கிண்டலுக்காக சொன்னேன்:
பைடன், கிருமிநாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தினால் கொரோனா வராது என டிரம்ப் கூறியதை விமர்சித்தார். அதற்கு டிரம்ப், “நான் அதனை கிண்டலுக்காகத்தான் சொன்னேன் என கூறினார். மேலும், கொரோனா பரவலை குறைக்க முகக்கவசம் அணிய வேண்டும் என தொற்றுநோய்த் தடுப்பு இயக்குனர் கூறியபோதும் டிரம்ப் ஏன் அதனை அணிவதில்லை என்று பைடன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் வைத்திருந்த முகக்கவசத்தை எடுத்துக்காட்டிய டிரம்ப், தேவைப்படும்போது அதனை அணிந்துகொள்வேன் என கூறினார்.
ஸ்மார்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்:
முகக்கவசம் குறித்து பைடன் விமர்சித்த நிலையில், பைடன் டெலாவேர் மாகாணத்துக்கு செல்லுமாறும், ஸ்மார்ட் என்ற வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் என டிரம்ப் பைடனை விமர்சித்தார்.
மூன்று ஆண்டுகள் அல்ல:
மேலும், தேர்தல் தொடங்கவுள்ள பொது உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆமி கோனி பாரெட்டை நியமிக்கப்பட்டது என் என பைடன் கேள்வியெழுப்பிய நிலையில், கடந்த தேர்தலில் தாம் வெற்றிபெற்றதாகவும், நீதிபதி பாரெட்டை நியமிப்பதற்கான அதிகாரம் எனக்கு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பைடன், நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளரே நீதிபதியை நியமித்திருக்க வேண்டும் என்று கூற, அதற்கு நான் நான்கு ஆண்டுகளுக்கு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கு அல்ல என டிரம்ப் பதிலளித்தார்.
வரி செலுத்த விருப்பமில்லை:
டிரம்ப், 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு வருமான வரியே இதுவரை செலுத்தவில்லை எனவும், கோடியாக சம்பாதித்த போதிலும் வருமானத்தை குறைத்து காட்டி வெறும் 750 டாலர் மட்டுமே வரியாக செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்திகளுக்கு என்ன பதில் என பைடன் கேட்டார். அதற்கு டிரம்ப் நான் வருமான வரிகளை செலுத்த விரும்பவில்லை என கூறினார்.
இதன் பின்பு இனவெறி, கலிபோர்னியா தீவிபத்து, உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் நேருக்கு நேராக காரசாரமாக மோதிக்கொண்டனர். இவ்வாறு அமெரிக்காவில் விவாதம் நடைபெற்று வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…