டிரம்ப் -மெலானியா உறவில் விரிசல் ஏற்படுகிறதா ?கையை தட்டிவிட்ட மெலானியா….
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியின் மெலானியாயாவின் கையைப்பிடிக்க முயற்சிப்பதும், அதை தவிர்ப்பதும் கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பும், தனது மனைவி மெலானியாவும் இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனது கையை டிரம்ப் பிடிக்க முயன்றதை மெலானியா தட்டிவிட்டார். அது அப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து ஓகியோவுக்கு டிரம்பும், மெலானியாவும் தனி விமானத்தில் புறப்பட்டனர்.
அப்போது, அவர்களை படம்பிடிக்க ஏராளமான செய்தியாளர்கள் காத்திருந்தபோது, அதிபர் டிரம்ப், தனது மனைவியின் கையைக் கோர்த்தபடி நடந்துவர முயற்சித்தார். ஆனால், மெலானியா முன்கூட்டியே, மிக நீண்ட மேலாடைக்குள் தனது கையை மறைத்துக் கொண்டார். இதனால், டிரம்ப், மெலானியாவின் இடதுபுறம் வந்தபோது, மெலானியா அதில் கைப்பையை வைத்திருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.