ட்ரம்ப் அதிரடி !லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அமெரிக்க தூதரகத்தை திறக்கப் போவதில்லை….
முந்தைய அதிபர் ஒபாமா நிர்வாகத்தால், 120 கோடி டாலர் செலவில் தேம்ஸ் நதியருகே னைன் எம்ஸ் பகுதியில் புதியதாக தூதரகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது க்ரோஸ்வெனர் ஸ்கொயர் பகுதியில் உள்ள தூதரகமே நல்ல இடத்தில் உள்ளதாகவும், அதை விட்டு வேறு எங்கோ தூதரகம் கட்டப்பட்டுள்ளது மோசமானது என்றும் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே புதிய தூதரகக் கட்டிடத்தை தாம் ரிப்பன் வெட்டித் திறக்கப் போவதில்லை என்றும், லண்டன் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ததற்கு இதுவே காரணம் என்றும் டிரம்ப் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார். எனவே வரும் 16-ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள புதிய தூதரகக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக டிரம்புக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் வருகையை லண்டன் வாசிகள் எதிர்ப்பதாலேயே அவர் வரவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
source: dinasuvadu.com