அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பா?
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் நிக்கி ஹாலே இடையே முறையற்ற தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது .
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெற்குக் கரோலினா மாநில ஆளுநராகவும் ஏற்கெனவே பணியாற்றியவர்.
இந்நிலையில் அதிபர் டிரம்புடன் நிக்கி ஹாலேக்கு அந்தரங்கத் தொடர்பு உள்ளதாக மைக்கேல் ஒல்ஃப் என்பவர் தனது ஃபயர் அண்டு ஃபியூரி என்னும் நூலில் தெரிவித்துள்ளார். நிக்கி ஹாலே பல நேரங்களில் வெள்ளை மாளிகையில் இருந்ததாகவும், அதிபரின் தனி விமானத்தில் சென்றதாகவும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளது.
இது தன் மீதான கடுமையான தாக்குதல் என்றும், அருவருக்கத் தக்கது என்றும் நிக்கி ஹாலே கருத்துத் தெரிவித்துள்ளார். ஒரே ஒருமுறை விமானப்படை விமானத்தில் தான் சென்றதாகவும், வெள்ளை மாளிகையில் தான் இருந்தபோது அங்குப் பலர் உடனிருந்ததாகவும் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பிடம் அரசு அலுவல் தொடர்பாகப் பலமுறை பேசியுள்ளதாகவும், தன்னைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை என்றும், அவருடன் தனியாகத் தான் இருந்ததில்லை என்றும் நிக்கி ஹாலே விளக்கம் அளித்துள்ளார்.