அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வர உள்ள தடுப்பூசி ! மையங்களுக்கு கிளம்பிய லாரிகள்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன .
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபைசர் தடுப்பூசியை நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் அரசாங்கம் ஏற்கனவே அனுப்பத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே அமெரிக்காவில் பயன்பாட்டிற்காக வரவுள்ள கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன .திங்களன்று 145 விநியோக மையங்களுக்கு தடுப்பூசி வந்து சேரும் என்றும், பின்பு கூடுதலாக 425 மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 66 புதன்கிழமை மையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் மத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.தடுப்பூசி கிட்டத்தட்ட 3,00,000 அமெரிக்கர்களுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.