சீனாவில் லாரி -பஸ் நேருக்கு நேர் மோதல்..! இந்த கோர விபத்தில் 36 பேர் பலி ..!

சீனாவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே 36 பயணிகள் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து டயர் வெடித்ததால் நிலைதடுமாறி பேருந்து லாரி மீது மோதியது என கூறப்படுகிறது.
சீனாவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் 58 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025