மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை.! 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டும்.!
சிம்கார்டுக்கே ரீசார்ஜ் செய்ய காசில்லாமல் தடுமாறி வரும் மக்களுக்கு இப்படி ஒரு பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது
இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தப்படும் மோடம்களுக்கு வழங்கப்படும் சிம்கார்டுகளுக்கு 13 இலக்கம் கொண்ட எண்ணாக மாற்றலாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. இப்பொது 117 கோடி மொபைல் எண்கள் உள்ளன. முன்பு இருந்தது விட எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது இந்திய மக்கள் தொகை சுமார் 135 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற டிராய் பரிந்துரை. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால் தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது பூஜ்யம் சேர்க்க தேவையில்லையாம்.இனிமேல் மொபைல் எண்ணுக்கு பேச மூலத்தில் பூஜ்யம் சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு இருக்கிறது. அதை 11 இலக்கமாக மாற்றலாம், இதனை தற்போது உள்ள 10 இலக்க மொபைல் எண்ணுக்கு முன்பு 9 என்ற எண்ணை கூடுதலாக சேர்க்க வேண்டுமாம். இதனால் என்ன பயன் என்றால் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியுமாம்.இதனால் ஆளுக்கு 7 சிம் வழங்க முடியுமாம்.