தெலுங்கில் ரீமேக்காகி வரும் லூசிபர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் வசூல் அளவில் சாதனை படைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது . இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும்,அதில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது . .இது சிரஞ்சீவியின் 153-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தினை தனி ஒருவன் படத்தினை இயக்கிய மோகன்ராஜா இயக்கவுள்ளார்.தமன் எஸ் இசையமைக்க உள்ள இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது.ஆனால் யார் நடிக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . மலையாளத்தில் எடுத்த கதை போல் இல்லாமல் சிறு மாற்றங்களை இந்த படத்தில் மோகன்ராஜா செய்ய உள்ளதாகவும், அதிலும் சிரஞ்சீவிக்கு படத்தில் காதல் காட்சிகளை சேர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தின் ஹீரோயின் உண்மையில் யார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…