கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா அல்லது திரிஷா நடிக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதிலிருந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா அல்லது நயன்தாரா நடிக்கவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சிம்புவுடன் நயன்தாரா வல்லவன் ,இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தார்.அதே போல திரிஷாவுடன் அலை ,விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இதில் சிம்புவிற்கு ஜோடி யார் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இப்போதே இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . தற்போது சிம்பு மாநாடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…