மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திரிபுராவில் சாரிலாம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. திரிபுராவில் சாரிலாம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் மாரடைப்பால் இறந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே பிப்ரவரி 18ஆம் தேதி 59தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 43இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

மார்ச் மூன்றாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுமே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள், தொண்டர்களின் வீடுகள் ஆகியவற்றின் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இத்தகைய தாக்குதலில் இருந்து சாரிலாம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாலாஸ் தேவ் வர்மாவும் தப்பி ஓடியுள்ளார். சாரிலாம் தொகுதிக்குப் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போதும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறும் என அஞ்சுவதால் போட்டியில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்