தென் கைலாயம் உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு! தலையில் குட்டு வாங்கிய விநாயகர்!

Published by
மணிகண்டன்

திருச்சி மைய பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த உச்சி பிள்ளையார் கோவில் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு கீழ்பகுதியில் மாணிக்கவிநாயகரும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் சிவன் தாயுமானவராகவும் தரிசனம் தருகின்றனர். இந்த கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த கோவில்தான் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும், விபீஷணர், ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து ரங்கநாதர் சிலையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். அப்போது இடையில் காவிரி ஆற்றங்கரையோரம் ஓய்வெடுக்க சென்று அமர்ந்தார். அப்போது கையில் இருந்த ரங்கநாதர் சிலையை அருகிலுள்ள சிறுவனிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.

விபீஷணர் ஓய்வெடுக்கும் நேரத்தில் அச்சிறுவன் அந்த சிலையை காவிரி ஆற்றங்கரை ஓரம் வைத்து விட்டு உச்சிமலை ஏறிவிட்டான். கண்விழித்து பார்க்கையில் அருகில் இருந்த சிறுவனை காணவில்லை.  அதன் பின்னர் ரங்கநாதன் சிலை காவிரி கரையோரம் இருப்பதைக்கண்டு சிலையை அங்கிருந்து தூக்க முற்பட்டார். ஆனால் அங்கிருந்து ரங்கநாதர் சிலை நகரவில்லை. பின்னர் தான் தெரிந்தது அந்த பாலகன் தான் விநாயகர் என்றும், நம்மை தூங்க வைத்து விட்டு உச்சிமலை ஏறிவிட்டார் என்றும் தெரிந்தது.

பிறகு ரங்கநாதருக்கு பெரியகோவில் காவிரி ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டது. அதுதான் ஸ்ரீரங்கம். விளையாட்டு காட்டிய பாலகன விநாயகரின் தலையில் விபீஷணர் குட்டு வைத்ததாகவும் வரலாறு உண்டு.

Recent Posts

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…

38 minutes ago

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…

1 hour ago

தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…

2 hours ago

Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…

2 hours ago

“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2025 :  எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…

4 hours ago