தென் கைலாயம் உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு! தலையில் குட்டு வாங்கிய விநாயகர்!
திருச்சி மைய பகுதியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த உச்சி பிள்ளையார் கோவில் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு கீழ்பகுதியில் மாணிக்கவிநாயகரும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் சிவன் தாயுமானவராகவும் தரிசனம் தருகின்றனர். இந்த கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் தற்போதும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த கோவில்தான் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், விபீஷணர், ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டு அங்கிருந்து ரங்கநாதர் சிலையை கையில் எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். அப்போது இடையில் காவிரி ஆற்றங்கரையோரம் ஓய்வெடுக்க சென்று அமர்ந்தார். அப்போது கையில் இருந்த ரங்கநாதர் சிலையை அருகிலுள்ள சிறுவனிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.
விபீஷணர் ஓய்வெடுக்கும் நேரத்தில் அச்சிறுவன் அந்த சிலையை காவிரி ஆற்றங்கரை ஓரம் வைத்து விட்டு உச்சிமலை ஏறிவிட்டான். கண்விழித்து பார்க்கையில் அருகில் இருந்த சிறுவனை காணவில்லை. அதன் பின்னர் ரங்கநாதன் சிலை காவிரி கரையோரம் இருப்பதைக்கண்டு சிலையை அங்கிருந்து தூக்க முற்பட்டார். ஆனால் அங்கிருந்து ரங்கநாதர் சிலை நகரவில்லை. பின்னர் தான் தெரிந்தது அந்த பாலகன் தான் விநாயகர் என்றும், நம்மை தூங்க வைத்து விட்டு உச்சிமலை ஏறிவிட்டார் என்றும் தெரிந்தது.
பிறகு ரங்கநாதருக்கு பெரியகோவில் காவிரி ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டது. அதுதான் ஸ்ரீரங்கம். விளையாட்டு காட்டிய பாலகன விநாயகரின் தலையில் விபீஷணர் குட்டு வைத்ததாகவும் வரலாறு உண்டு.