விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி சிகிச்சை..!
விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு காமித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன் தனது மாமா அரவிந்த் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார் அப்போது அண்ணாசாலை அருகே அவர்கள் வந்தபோது பின்னால் கட்டி இருந்த சிறுவன் சசிவர்ஷன் தூக்கக்கலக்கத்தில் கீழே விழுந்துவிட்டார் .
இதனால் சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தையல் போடும் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
டாக்டர்கள் முதலில் சிறுவனுக்கு ஊசி போட முயன்ற போது சிறுவன் பயத்தில் ஊசி வேண்டாம் என அடம்பிடித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனிடம் பேச்சு கொடுத்து உனக்கு என்ன பிடிக்கும் என சிறுவனிடம் கேட்டார் அதற்கு சிறுவன் தனக்கு நடிகர் விஜய் தான் மிகவும் பிடிக்கும் என்று வழியில் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
விஜய் நடித்த அனைத்து படங்கள் மற்றும் பாடல்கள் தனக்கு மனப்பாடமாக தெரியும், எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு சிறுவனுக்கு விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு காமித்துள்ளனர் அதை சிறுவன் வாங்கிய உற்சாகமாக பார்த்துள்ளார் உடலில் ரத்தம் வழிந்த நிலையில் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது டாக்டர் சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்தை தெளித்து தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.