நடுவானில் சட்டையை கழட்டி பணிப்பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பயணி .!

Published by
murugan
  • விமானத்தில் வில்லியம் என்பவர் அதிகமாக தனக்கு  மது வேண்டும் என கோபத்தோடு தூக்க மாத்திரையை மதுவில் கலந்து குடித்தபடி இருந்தார்.
  • போதை தலைக்கேறியதால் தனது சட்டையை கழட்டி விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் தலையில் சட்டையை போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்.

மேற்கு லண்டனை சேர்ந்த வில்லியம் கிளக். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் ஏறிய இவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட மதுவை குடித்து உள்ளார்.

பின்னர் கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தனக்கு  மது வேண்டும் என கோபத்தோடு தூக்க மாத்திரையை மதுவில் கலந்து குடித்தபடி இருந்தார். இதனால் போதை தலைக்கேறியதால் வில்லியம் தனது சட்டையை கழட்டி விமானத்தில் பயணிகளுக்காக பணி செய்யும் பணிப்பெண்கள் தலையில் சட்டையை போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்.

பின்னர் ஊழியர்கள் அவரை கட்டி வைத்தனர். ஆனாலும் கட்டை அவிழ்த்து விட்டு மீண்டும் வில்லியம் சக பயணிகள் மீது ஏறி நிற்பது. அவர்களின் தலையில் முட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.இதையடுத்து விமானம் லண்டனுக்கு வந்த பின்னர் வில்லியம்ஸை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய வில்லியம்ஸ் வழக்கறிஞர்கள் தூக்கமின்மை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டார் என கூறினார்.இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Published by
murugan

Recent Posts

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

6 minutes ago

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

11 minutes ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

46 minutes ago

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

1 hour ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

3 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

3 hours ago