இனி பிளாஸ்டிக் கொடுத்தால் இலவசமாக மெட்ரோவில் பயணம்..!
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொடுத்துவிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் செய்யலாம் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ரோம் நகரில் உள்ள ஜியோவானின் மெட்ரோ நிலையத்தில் இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது.
அங்கு உள்ள mycicero என்ற செயலியை உள்ள பார்கொட்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தில் செலுத்த வேண்டும். அப்படி கொடுத்த பிறகு அவர்களுக்கு மெட்ரோ பயணத்திற்கான பணம் ஏறிவிடும் இதை இத்தாலி சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.