பேரக்குழந்தைகளை பார்க்க ஆந்திராவில் இருந்து அமெரிக்கா பயணம்… 6 பேர் உயிரிழப்பு.!

ஆந்திர மாநிலம் அமலாபுரம் நகரை சேர்ந்தவர்கள் 64 வயதான நாகேஸ்வரராவ் மற்றும் 60 வயதான சீதாமஹாலக்ஷ்மி ஆகியோரது மகள் நவீனா மற்றும் அவரது கணவர் லோகேஷ் ஆகியோர் எல்1 விசாவில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நிஷிதா மற்றும் ஹிருத்திக் என இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.
லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!
தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு நாகேஸ்வரராவ் மற்றும் சீதாமஹாலக்ஷ்மி ஆகியோர் ஆந்திராவில் இருந்து அமெரிக்கா சென்று இருந்தனர். நேற்று லோகேஷ்,மினி வேனில் தனது குடும்பத்துடன் டெக்சாஸ் மாகாணத்தில் போர்ட் வொர்த்துக்கு அருகிலுள்ள ஜான்சன் கவுண்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த சமயம் எதிரே வந்த ட்ரக் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், லோகேஷ் தவிர நாகேஸ்வரராவ், சீதாமஹாலக்ஷ்மி, நவீனா, நிஷிதா மற்றும் ஹிருத்திக் ஆகிய 5 பேரும், வாகன ஓட்டிவந்த குடும்ப நண்பரான ருஷில் பாரி என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . லோகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிரே வந்த ட்ராக் ட்ரைவர் மற்றும் 17 வயதான இளைஞனும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோர்கள் ஆந்திர மாநிலம் மும்மிடிவரம் எம்எல்ஏ பி.வெங்கட சதீஷ் குமாரின் உறவினர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025