மக்கள் செல்வன் வெளியிடும் கசடதபற டீசர்.! 6 கதைக்களம்.! ஒரு இயக்குனர்.!

கசடதபற படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிம்பு தேவன் தமிழ் சினிமாவில் 23- ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், படத்தை இயக்கி மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கத்தில் கசடதபற எனும் ஆந்தாலஜி படம் தயாராக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தங்களது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சாந்தனு , ஹரிஷ் கல்யாண், சங்கர், ரெஜினா, பிரேம் ஜி அமரன், பிரியா பவானி, சுந்தீப் கிசான், வெங்கட் பிரபு, என பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் என 6 ஒளிப்பதிவாளரும், ஆண்டனி, பிரவீன்.கே.எல், விவேக் ஹர்ஷன், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமத், ரூபென் என 6 எடிட்டர்களும், யுவன் சங்கர் ராஜா, பிரேம் ஜி அமரன், சாம்.சி.எஸ், சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் என 6 இசையமைப்பாளர்களும் இந்த ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 27-ந் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கசடதபற படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாகவும், அதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவதாகவும் இயக்குனர் சிம்பு தேவன் அறிவித்துள்ளார்.
Very happy to announce our #kasadatabaraTeaser will be released by our very own makkal Selvan @VijaySethuOffl at 6pm @vp_offl @tridentartsoffl #kasadatabaraOnSonyliv from august 27th! @SonyLIV @SonyLIVIntl @Muzik247in #kasadatabara #talesOfSouthMadras pic.twitter.com/DdWi83k4Ju
— Chimbu Deven (@chimbu_deven) August 16, 2021