அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக மாநில செனட்டராக திருநங்கை தேர்வு.!
டெலாவேர் மாநில செனட்டிற்கான தேர்தலில் திருநங்கைகளின் ஆர்வலரான சாரா மெக்பிரைட் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு கட்சியின் ஸ்டீவ் வாஷிங்டனை சாரா தோற்கடித்தார். கல்லூரியில் படிக்கும் போது சாரா, ஒபாமா நிர்வாகத்துடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய முதல் திருநங்கை என்ற சிறப்பை பெற்றதுடன், 2016-ல் ஒரு பெரிய அரசியல் மாநாட்டில் பேசிய முதல் திருநங்கை என்ற சிறப்பையும் சாரா பெற்றார்.
தற்போது, அமெரிக்காவின் மாநில செனட்டராக வெற்றி பெற்றுள்ளார். இது அமெரிக்கா வரலாற்றில் ஒரு மாநில செனட்டர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சிறப்பை சாரா மெக்பிரைட் பெற்றுள்ளார்.
இவரது வெற்றி குறித்து மனித உரிமைகள் பிரச்சாரத்தின் தலைவர் அல்போன்சா டேவிட் கூறுகையில், மெக்பிரைட் அவருக்காக மட்டுமில்லாமல் நம் முழு சமூகத்திற்கும் வரலாற்றை உருவாக்கியுள்ளார் என்றும், அவரது இந்த வெற்றி எந்தவொரு நபரும் தங்கள் பாலின அடையாளத்தை அல்லது பாலியல் நோக்குநிலையை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவை அடைய முடியும் என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.
.@SarahEMcBride brings the kind of leadership our nation urgently needs: brilliant, compassionate, passionate about making life better for the people she serves. We were proud to be a part of her journey. And tonight, we congratulate her on her historic win! #UnityWins
— Alphonso David (@AlphonsoDavid) November 4, 2020