ஜப்பான், பிரான்சுக்கு பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்.!
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பான், பிரான்சுக்கும் பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் பரவி அதிகபட்சமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. அதில் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் பழைய நிலை வந்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பான், பிரான்சுக்கும் பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. ஜப்பானில் ஐந்து பேருக்கும், பிரான்சில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் கடும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பொறுத்தவரை பிரிட்டன் விமான சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.