உக்ரைனில் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ரயில்கள் இயக்கம்..!

உக்ரைனில் இந்தியர்கள் உள்ளிட்டோர் சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, உக்ரைனில் இந்தியர்கள் உள்ளிட்டோர் சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உக்ரைனின் மேற்குப் பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு சார்பில் கட்டணமில்லா ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025