செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் வசிக்க பயிற்சி – 4 பேர் தேவை; நாசா அழைப்பு!
செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி பெற 4 பேர் தேவை என நாசா அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஆய்வு செய்து வருகிறது. இதில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க முடியும் என தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாக ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற்குன்றின் மீது செவ்வாய் கிரகம் போன்ற சூழலை நாசா உருவாக்கி உள்ளது.
இங்கு உயிர் வாழ்வது கடினமாக இருந்தாலும், இந்த இடத்தில் தங்கி இருந்து ஓராண்டு பயிற்சி பெறுவதற்கு 4 பேர் தேவைப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதற்கான விண்ணப்பங்களை பெற கூடிய பணியும் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த விண்ணப்பம் அமெரிக்க குடிமக்களிடமிருந்து மட்டுமே பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.