அமெரிக்காவில் தடம் புரண்ட ரயில் – 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலுள்ள மொன்டானா மாகாணத்தில் ரயில் தடம் புரண்டதில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மொன்டானா எனும் மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 147 பயணிகளும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த 13 பேரும் அந்த ரயிலில் பயணம் செய்ததாகவும், வடக்கு மொன்டானாவில் ஜோப்ளின் அருகே மதியம் 4 மணி அளவில் 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த செய்தி தங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.