பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்து பாரூகாபாத் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்து சென்றபோது, கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி சென்ற ஷா ஹுசைன் எக்ஸ்பிரஸ், அந்த பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த பேருந்தின் பயணம் செய்த 19 பேர் பலியானார்கள். மேலும், 9 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், அவர்களை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்த ஒன்பது பேரில், ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்கள் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…