கோர விபத்து; தடம் புரண்ட ரயில்… 4 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
ஜெர்மனியில் பவேரியாவில் பிராந்திய பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம்.
தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது, தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் அதிகளவிலான மாணவர்களுடன் முனிச் நோக்கிச் சென்ற பிராந்திய ரயில் பர்கிரேனில் சிறிது நேரத்திற்குப் பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. கார்மிஷ்- பார்டென்கிர்சென் என்ற ரிசார்ட் நகரத்திற்கு வெளியே இந்த ரயில் புறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு டபுள்-டெக் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தன. மக்கள் பாதுகாப்பாக ஜன்னல்களுக்கு வெளியே இழுக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கோர விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் போது சுமார் 140 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், குறிப்பாக அதிகளவில் மாணவர்கள் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.