அமெரிக்காவில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து!

Default Image

ரயில் டிரக்குடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.அதே ரயிலில் தான்  அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

Image result for america mp train accident in White Sulphur Springs vs track

குடியரசுக் கட்சி எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் உள்ள வொய்ட் சல்ஃபர் ஸ்பிரிங்ஸ் (White Sulphur Springs) என்ற நகருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரயில் சார்லோட்டஸ்வில்லி (Charlottesville) என்ற நாகரைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற குப்பை எடுத்துச் செல்ல்லும் டிரக் மீது மோதியது. இதில் டிரக்கின் ஓட்டுநர் உயிரிழந்தார். டிரக்கில் இருந்த மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் விபத்தின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் லூயிஸ் (Jason Lewis,) சிகிச்சைக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்