பார்டர் படத்தின் டிரைலர் வெளியீடு.!!
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாமி சி எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். படத்திற்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது. அடுத்த அப்டேட்டாக படத்தின் ட்ரைலர் வெளியீடபட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here’s the trailer of #Borrder wishing @arunvijay01 and team the best!!https://t.co/pL7y7wanKR@dirarivazhagan @ReginaCassandra @StefyPatel @SamCSmusic @All_In_Pictures @thinkmusicindia
— Suriya Sivakumar (@Suriya_offl) September 12, 2021