பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய “பாவ கதைகள்” தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் ஒரு அந்தலாஜி வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் தளத்திக்ற்காக இயக்கி வந்தனர் .
இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் “லவ் பண்ணா உட்ரணும்” என்ற பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி கோச்லின் நடித்துள்ளனர்.மேலும் இந்த வெப் சீரிஸில் வெற்றிமாறன் இயக்கும் பகுதிக்கு “ஓர் இரவு” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர் .அதே போன்று சுதா கொங்கரா இயக்கும் பகுதிக்கு “தங்கம்” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பவானி ஸ்ரீ,சாந்தனு , காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர் .மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் பிரிவுக்கு “வான்மகன்”என்று பெயரிடப்பட்டுள்ளது.அதில் சிம்ரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர்.இந்த வெப் சீரிஸ் வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது பாவ கதைகள் படத்தின் டிரைலரை நெட்ஃபிளிக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.அந்த வெப் தொடரில் “ஒரு குடும்பத்தின் மானம் , ஆணவம்,கௌரவம் ஆகியவற்றை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறங்கா ,அதனை வாழ்க்கை முழுவதும் இறக்கி வைக்கவே கூடாதா அளவிற்கு என்ற ஒரு வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெண்ணின் பல உணர்வுகளை உள்ளடக்கிய இந்த வெப் தொடரின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…